வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் ட்ரவுசர் எண்ணெய் தேய்த்து தலை வாரி, நெற்றியில் விபூதி பிஞ்சு விரல்களில் மருதாணியிட்டு, மஞ்சள் பையில் ஒற்றை சிலேட்டுடன், காலணி அணிய வைத்து கல்லும் கல்லும் கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி கால் நோகாதிருக்க கண்கள் ஆங்காங்கே இருந்த தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள் கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள் கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள் மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே பள்ளிக்குச் செல்லும் நாட்கள் அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கொடுக்கும் எட்டனா. அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுப்பார் எட்டனா. ஆக மொத்தம் ஒரு ரூபாய். இடையில் அண்ணன், அக்காவிடமும் அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம். பள்ளிக்கு அருகில் பஜார் டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு ...