Skip to main content

Posts

Showing posts from 2025

தேயிலைத்தோட்ட பகுதிகளில் பழைய கால்பந்து விதிமுறைகள்

 தேயிலைத்தோட்ட பகுதிகளில்  பழைய கால்பந்து விதிமுறைகள்    1. நடுவர் இல்லை. 2. வீரர்கள் சோர்வாகும் வரை, அல்லது சூரிய அஸ்தமனம் ஆகி பந்து, கண்ணுக்கு புலப்படாத, வரைக்கும் விளையாட்டு தொடரும். 3. ஸ்கோர் 23-22. வரையோ , அதை தாண்டியோ போய்க்கொண்டிருக்கும்  4. ஒரு வீரர் கடவுள் மீதும் , அம்மாமீது சத்தியம் செய்தால் பெனால்டி வழங்கப்படும். 5. குண்டான நபர் கோல்கீப்பராக செயல்படுவார் 6. பந்தின் உரிமையாளர் கோபமடைந்து, அவர் பந்தை எடுத்துக்கொண்டால், ஆட்டம் முடிந்துவிடும்  7. அனைவரும் ஒப்புக்கொண்டால் ஃபவுல்ஸ் கணக்கிடப்படும்  8. யாரவது ஃபுட்பால் பூட் அணிந்து வந்தால் , அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை  9. அணிகள் சமமாக இல்லாவிட்டால் கூடுதல் வீரர் அனுமதிக்கப்படுவார்  10. பெனால்டி கிக் போது கோல்கீப்பரை மாற்றிக்கொள்ளலாம்    11. பந்து கிராஸ்பாரை தாண்டிச் சென்றால், அது கோலா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க ஆட்டம் அரை மணி நேரம் இடைநிறுத்தப்படும் 12. பந்தின் உரிமையாளர் வலுவான அணிக்காக விளையாடுவார் இந்த அழகான பொக்கிச நினைவுகளில் வாழ்ந்த அனைவருக்கும்  வணக்கம்..

மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...

 தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக... மிச்சம் இருக்கற குட்டிக் காடு, இந்த தலநார்... வால்பாறைல இருக்கு... மழை ஆரம்பிச்சாவே... இந்த இடம் சொர்க்கமா மாறிடும்... வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு... பெருசா tourist placeனு தெரியாததால, மக்கள் விட்டு வெச்சிருக்காங்க... லேசா ஒரு தூரல் விழுந்தாவே... இங்க அட்டைகள் படையெடுக்கும்... அதெல்லாம் பார்த்தா, இந்த அழகை அணைக்க முடியுமா??? மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பிடணும்🥰 நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா... தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம, பாட்டில்களை வீசாம, புகைப் பிடிக்காம, முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ... விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம... அமைதியா வந்துட்டு போங்க... இயற்கையை ரசிங்க... அதோட இயல்பை மாத்தாம🥰❤️

வால்பாறை எங்களுக்கு சொர்க்கம்

 வெள்ளை சட்டை காக்கி அரைக்கால் ட்ரவுசர் எண்ணெய் தேய்த்து தலை வாரி, நெற்றியில் விபூதி  பிஞ்சு விரல்களில் மருதாணியிட்டு, மஞ்சள் பையில் ஒற்றை சிலேட்டுடன், காலணி அணிய வைத்து கல்லும் கல்லும்  கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி கால் நோகாதிருக்க கண்கள் ஆங்காங்கே இருந்த  தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள்  கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள்   கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள் மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே பள்ளிக்குச் செல்லும் நாட்கள்  அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கொடுக்கும் எட்டனா. அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுப்பார் எட்டனா. ஆக மொத்தம் ஒரு ரூபாய். இடையில் அண்ணன், அக்காவிடமும்  அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம். பள்ளிக்கு அருகில் பஜார்  டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு  ...

இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!!

  இன்னொரு மாஞ்சோலை ஆக மாறுகிறதா வால்பாறை..!!! வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு கவனஈர்ப்பு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என வால்பாறையில் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்ன...? 🔴மத்திய அரசு வெளியிட்டுள்ள 29.11.2024 சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதா S.O.5129 (E) சுற்றுச்சூழல், துறை டெல்லி, இந்த மசோதாவால் வால்பாறை உள்ளிட்ட 183 கிராமங்களின் சமூக, பொருளாதார வாழ்வை பெரிய அளவில் பாதித்து வால்பாறை பகுதியின் எதிர் காலத்தை முற்றிலுமாக முடக்கி விடும் அபாயம் ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நம் வால்பாறை பகுதியில் 07.01.2025 அன்று 24 மணிநேர முழு கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தந்து வால்பாறை பகுதியை அழிவில் இருந்து காக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புடன் அழைக்கிறோம். (வால்பாறை பகுதியின் பாதிப்புகள் அபாயங்கள்:) 1. ஆழியார் செக் போஸ்ட் மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும், 2. தனியார், சுற்றுலா, கனரக வாகனங்கள், போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த ஓட்டுநர்கள், ஊழியர்கள், ஓர்க்சாப்...