Skip to main content

Posts

Showing posts from October, 2024

அரும்பு பருவம்

 அரும்பு பருவம் நனை, முகை, மொக்குள் என மூன்று பிரிவாக பெயர் குறிப்பிடப்படுகிறது. அதாவது அரும்பும் நிலைக்கு அரும்பு எனப் பெயர். நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை, முகை - தலைகாட்டிய அந்த அரும்பு முத்தாக மாறும் நிலை. மொக்குள் - பூவுக்குள் மணம் பெறக்கூடிய நிலை. இப்படி பல பிரிவுகளாக அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என 13 பெயர்களில் தனித்தனியாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் பூக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலை 'பொதும்பர்' என குறிப்பிடப்படுகிறது. செடியில் இருந்து கீழே தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் 'பொம்மல்' எனக் குறிப்பிடப்படுகிறது. இடம், பொருள், சூழலுக்கேற்ப ஒரு பொருளைக் குறிப்பிட தமிழ் மொழியில் தான் எவ்வளவு அழகிய பெயர்கள்? தமிழ் வளர்ப்போம்...!

நட்பு

 நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து  இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து  பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து  பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமான...

வால்பாறை இதில் அழகு

 மேற்குத் தொடர்ச்சி மலை உருவாக்கத்தையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்வோம்... குஜராத் மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாகிறது அங்கிருந்து மகாராஷ்டிரா கோவா கர்நாடகா வழியாக தமிழ்நாடு கேரளா எல்லையில் முடிவடைகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளின் மொத்த நீளம் சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் ஆகும்‌ உலகத்தில் உள்ள எந்த மலைகளுக்கும் இல்லாத சிறப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உண்டு.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும்தான் சோலை காடுகள் மூலம் சுனைகள் உருவாகி அதன் மூலம் நீர் கசிந்து அந்த நீர் ஓடைகளாக உருவாகி அது அருவியாகவும் ஆறாகவும் பாய்ந்தோடுகிறது.. மேற்கு தொடர்ச்சி மலைகள் பலவகையான கனிம வளங்களை கொண்டுள்ளது பல்லுயிர்கள் வாழும் இடமாக விளங்குகிறது... மேற்கு தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் பொக்கிஷமாக அறிவித்துள்ளது... நாமும் அந்த பொக்கிஷத்தை பாதுகாப்போம்.

வால்பாறை ஊரும், பேரும்...!!!

Welcome to Valparai… வால்பாறை ஊரும், பேரும்...!!! பெயர் காரணம் என்னவா இருக்கும், வால் இல்லாத ஊருக்கு ஏன் இந்த பேரு..!!! சின்னதா தகவல்  சிலு சிலு என்று வீசும் காற்று, காட்சி எங்கும் பசுமை, தென் அமெரிக்காவின் கிராஃபிட்டி தலைநகரங்களில் ஒன்றாக Valparaiso சிலி கருதப்படுகிறது சிலியின் முக்கிய நகரமான வால்பாரைசோவ் (Valparaíso City in Chile) இதன் முக்கியகாரணமாம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் வால்பாறையின்  முந்தைய பெயர் பூனாச்சி மலை,  சிலி நாட்டின் முக்கிய கடற்கரை நகரமான வால்பெய்ரசோவ் இது போன்று இந்த ஊர் இருந்ததால் ஆங்கிலேயர்கள் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள் என்பது தகவல்  வல்பெய்ரசோவ் என்ற பெயர் மருவி  வால் பாறை ஆனதாக கூறப்படுவது , இன்னும் நாம் எங்கெல்லாம் வால்பாறை என்று tag செய்தாலும் அப்பெயர் வந்து தான் செல்கிறது, ஆங்கிலேயன் காலத்தில் #கார்வர்_மார்ஷ்” என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு தேடி வந்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக, மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேல...

Valparai The Seventh Heaven

 வால்பாறை. இது நாங்கள் வாழ்ந்த ஊரல்ல, எங்களை, வாழ வைத்த ஊர், இது  நாங்கள் பிறந்த ஊர் மட்டுமல்ல, உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊர். இங்கே  நாங்கள் வாழ்ந்ததோடுமட்டுமல்ல, எப்படி  வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொடு த்த ஊர். இந்த  ஊர் சாதி, மதம்,கருப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன்  என்று எந்த வேறு பாட்டையும் கற்றுக்கொடுக்கவில்லை. இங்கே  ராமசாமியும் பீட்டரும் சாகுல் அமீதும் சகோதரர்களாய்  வாழ முடியும் என்று சாதித்துக் காட்டிய ஊர். இந்த  ஊர் கொய்யா, பலாப்  பழங்களை  மட்டுமல்ல  கம்மல், பழம்  கொட்டம் பழம், நாக்குறிஞ்சாம்  பழம், தட் பூட்  பழம், மொட்லீ  பழம்  போன்ற  சுவை  மிகுந்த  பழங்களையும். சுக்குட்டிகீரை  பொண்ணாங்கண்ணி கீரை, சிறுகிரை, ஐ விரல் கீரை  சே மங்கீரை, போன்ற  சத்து நிறைந்த  கீரை களையும்  வாரிக்  கொடுத்தது. இந்த  ஊரில்  இன்று  மட்டுமல்ல, வாழ்ந்த  எங்களிடமும்  ஈரம்  இன்னும்  வற் றாமல்  தான்  இருக்கிறது. இந்த  ஊரில் த...