வெள்ளை சட்டை
காக்கி அரைக்கால் ட்ரவுசர்
எண்ணெய் தேய்த்து
தலை வாரி, நெற்றியில் விபூதி
பிஞ்சு விரல்களில்
மருதாணியிட்டு,
மஞ்சள் பையில்
ஒற்றை சிலேட்டுடன்,
காலணி அணிய வைத்து
கல்லும் கல்லும்
கலந்த பாதையில் ஓடியாடி விளையாடி
கால் நோகாதிருக்க
கண்கள் ஆங்காங்கே
இருந்த
தேயிலை செடி ஊர் தெரியும் வேலிச் செடிகள் கொழுந்து ஏற்றி செல்லும் டிராக்டர் புல்லட்டில் செல்லும் மேலாளர்கள் அதிகாரி ஐயா
மாமன், அப்பா மேஸ்திரிகள் அண்ணன் சூப்பர் வைசர்கள், குண்டு விளையாட்டு வேண்டாம் மிரட்டும் மாமா க்கள் கடையில் இருக்கும் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் பல நடிகர்களின் காலண்டர்கள் சாமி போட்டோக்கள் சினிமா கொட்டாய்களில் போடப்படும் சினிமா போஸ்டர்கள்
மரங்கள் உழைக்கும் உணர்வாலர்கள் கண்டுரசித்தபடியே
பள்ளிக்குச் செல்லும் நாட்கள்
அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா கொடுக்கும் எட்டனா.
அம்மாவுக்கு தெரியாமல்
அப்பா கொடுப்பார் எட்டனா.
ஆக மொத்தம் ஒரு ரூபாய்.
இடையில் அண்ணன், அக்காவிடமும்
அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம்.
பள்ளிக்கு அருகில் பஜார்
டீ கடை. ஐஸ் சைக்கிள் பேக்கரியில் பிரட் கமர்கட்டு கடலை அத்து கடையில் போண்டா, வடை
அடடடா எவ்வளவு
அமிர்தமாய் இனிக்கும் தெரியுமா!
இன்று நினைத்தாலும்
நாவில் ஊறும் எச்சில்...
ஒன்பது மணிக்குள் பள்ளியின்
உள்ளே செல்ல வேண்டும்
கையில் தடியுடன்
ஆசிரியர்கள்
கண்டிப்போடு இருப்பார்.
நேரம் தவறினால்,
தடியால் விழும் தட்டு கன்னத்தில் அடிக்கும் முன் அழுகை அடித்தாலும் வலிக்காது.
வீட்டுப்பாடம் செய்யமாட்டேன்
விளையாடியே வீணடிப்பேன்
நேரத்தை...விளைவு
பாடவேளையில் அரைமணிநேரம்
வெளியிலே அரைமண்டி ஸ்கேனால் கையில் அடி கெண்டைக்கால் முழுவதும் அடி
பாவமாக பாவனை
செய்து சென்றிடுவோம் விரைவில்.
வரிசையாக பாடங்கள்
இடையில் ஒரு இடைவேளை.
மீண்டும் தொடரும் பாடவேளை.
பன்னிரண்டு மணிக்கு
மதிய உணவு. அண்ணாதுரைகள் பரமசிவம் நேரு அண்ணன் , பாலன்,கணபதி, சக்திகள்
நண்பர்கள் பட்டாளம்
நாளும் படரும்...
விதவிதமான உணவு
உண்டு முடித்த மகிழ்வு
பங்கிட்டு உண்ணும் சாதத்தில் பல வகைகள்
எந்த அச்சமும் இல்லாமல் வால்பாறை பள்ளியின்
வகுப்பின் உள்ளே
அமர்ந்த நாட்கள்.
இங்கு படிக்கவே இல்லை
Tutorial ஏனோ கல்லூரியானது
ஆசிரியர் துவங்குவார்
புதிய பாடத்தை
மதியம் முடிஸ் திரையரங்கம் mind ல்
அரைகுறை கவனிப்பு.
அடுத்த இடைவேளையில்
அவசரமாய் ஐஸ்
வாயில் திணித்தபடி,
பள்ளியின் மைதானத்திலே
ஓடிபிடித்து விளையாட்டு
மீண்டும் பாடவேளை
நாலரைமணிக்கு
முடிவடையும் பள்ளி
இரும்புச் சட்டத்தில்
மணி அடித்ததும்
இறகை விரித்து பறக்கும்
பந்தயப்புறாக்களாய்-நாங்கள்
முதலில் பேருந்து நுழைவாயிலை
அடைபவருக்கு அதிர்ஷ்டம்
பல நேரம் சீட் கிடைக்காமல் தோல்விகிட்டும்.
வண்ணமயமான பேருந்து நிலையம்
எப்படி இருந்தாலும் பேருந்தின் பின் பகுதி கல்லாரின் ஆக்கிரமிப்பு
நிறுத்தம் அது கல்லார் பிரிவு
ஏனோ இன்று பிரிவு
முப்படைகளும் தோற்று போகும் வீட்டுக்கு செல்லும் நடைகள்.
கலைஞரும், வைகோவும் தோற்று போவார்கள் அப்படி ஒரு பேச்சு சாலையில்.
வழியில் தபால் பட்டுவாடா, அக்கமா, நாடார் சூப்பர் மார்க்கெட் மளிகை பொருட்கள்
மறக்கமால் வார இதழ்கள்
வீடு நுழைந்ததும் -காபி
கைகால்கள் அலம்பியதும் குடிக்க வேண்டும் கவர்னர் ஆட்சி.
அந்தி வேளையில் விளையாட்டு
உலக கோப்பை சத்தம் தோற்று போய்விடும்
அரைகுறையாய் வீட்டுப்பாடம்
இரவு நேர சிற்றுண்டி
இனிமையான சூழலில்
காலைவரை கவலையற்ற உறக்கம்.
விடுமுறை நாட்கள்
விழாக்கள் போல
சிட்டுகளாய் வலம்வருவோம்
வீதிகளில்....
சில்வண்டுகளாய் சப்தமிட்டு ....
விறகு பொறுக்குவான் ஒருவன்
மிட்டாய் வாங்கிடுவான் இன்னொருவன்
அரிசியை அள்ளி வருவான்
காட்டு வழியில் சென்று
ஊர்திறந்த வெளியில் அமர்ந்து
கூட்டாஞ்சோறு சமைப்போம்
கூடிச் சேர்ந்து....
பொங்கல் இங்கு உலக திருவிழா.
Open தியேட்டர் இங்கு mass.
என்ன பெரிய போத்தீஸ் நகை கடை எத்தனை தங்கங்கள்,.
அவசரத்துக்கு உடனே கழட்டி தரும் அற்புதமான உறவுகள்.
ஒவ்வொரு விடியலும் ஆனந்தம்.
பல வருடம் கழித்து செல்கிறேன்
நான் நேசித்த இடங்களைத் தேடி
மாறிவிட்டன நான் விளையாடி
மகிழ்ந்த இடங்கள்
அன்று நான்
கண்ணாமூச்சியாடிய கழுதை ஏற்றம் ஏறி பந்து விளையாடி இடங்கள்
இன்று காடு ...
வீட்டின் முகப்பிலே
விளையாடிடும்
சிறுவர் சிறுமியர்கள்
மாலை நேர வேளையில்
மலர் உதிர்க்கும்
சாலையோர மரங்களுக்கு
காலம் வந்ததோ?
அங்கு மின்சாரக் கம்பங்கள்
காட்சி தருகிறது...
இயந்திரங்களின் வரவேற்பு
நடனம் என்
இயற்கையின் அழகை
அழித்து விட்டிருந்தது...
காலம் கடந்து விட்டது
ஆம் நாம்
கடந்து வந்த பாதையும்
மறைந்து போய்விட்டது
தினமும் ஒரு நிமிடமாவது அம்மா அப்பாவை எண்ணிக் கொள்ளுங்கள் குறிப்பாக உணவு அருந்தும் முன்பாக
கல்வி என்னும் ஒரு மிக பெரிய ஆயுதத்தை கையில் கொடுத்து சென்ற அப்பா, அம்மா....
இன்னும் எத்தனையோ.....

Comments
Post a Comment