தேயிலை தோட்டங்கள்ல அழிஞ்சது போக...
மிச்சம் இருக்கற குட்டிக் காடு,
இந்த தலநார்...
வால்பாறைல இருக்கு...
மழை ஆரம்பிச்சாவே...
இந்த இடம் சொர்க்கமா மாறிடும்...
வனவிலங்களோட நடமாட்டமும் இருக்கு...
பெருசா tourist placeனு தெரியாததால,
மக்கள் விட்டு வெச்சிருக்காங்க...
லேசா ஒரு தூரல் விழுந்தாவே...
இங்க அட்டைகள் படையெடுக்கும்...
அதெல்லாம் பார்த்தா,
இந்த அழகை அணைக்க முடியுமா???
மழைப் பருவம் ஆரம்பிச்சிடுச்சு...
சீக்கிரம் கிளம்பிடணும்🥰
நீங்களும் இப்படி ஒரு குட்டி சொர்க்கத்தை பார்த்து கரைய வர்றீங்கனா...
தயவு செய்து பாலிதீன் குப்பைகளை போடாம,
பாட்டில்களை வீசாம,
புகைப் பிடிக்காம,
முக்கியமா, இங்க இருக்கற செடி கொடி மரங்களையோ...
விலங்குகள், பறவைகளையோ தொந்தரவு பண்ணாம...
அமைதியா வந்துட்டு போங்க...
இயற்கையை ரசிங்க...
அதோட இயல்பை மாத்தாம🥰❤️
Comments
Post a Comment