Welcome to Valparai…
வால்பாறை ஊரும், பேரும்...!!!
பெயர் காரணம் என்னவா இருக்கும், வால் இல்லாத ஊருக்கு ஏன் இந்த பேரு..!!!
சின்னதா தகவல்
சிலு சிலு என்று வீசும் காற்று,
காட்சி எங்கும் பசுமை,
தென் அமெரிக்காவின் கிராஃபிட்டி தலைநகரங்களில் ஒன்றாக Valparaiso சிலி கருதப்படுகிறது
சிலியின் முக்கிய நகரமான வால்பாரைசோவ் (Valparaíso
City in Chile) இதன் முக்கியகாரணமாம்,
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் வால்பாறையின்
முந்தைய பெயர் பூனாச்சி மலை,
சிலி நாட்டின் முக்கிய கடற்கரை நகரமான வால்பெய்ரசோவ் இது போன்று இந்த ஊர் இருந்ததால் ஆங்கிலேயர்கள் இந்தப் பெயர் வைத்துள்ளார்கள் என்பது தகவல்
வல்பெய்ரசோவ் என்ற பெயர் மருவி
வால் பாறை ஆனதாக கூறப்படுவது , இன்னும் நாம் எங்கெல்லாம் வால்பாறை என்று tag செய்தாலும் அப்பெயர் வந்து தான் செல்கிறது,
ஆங்கிலேயன் காலத்தில் #கார்வர்_மார்ஷ்” என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு தேடி வந்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக, மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும், பனித்துளிகள் சில்லிட, புலிகளும் யானைகளும், பளிங்கு பாறைகள் துள்ளிட, நதிகளும், ஓடைகளும், வான் நிறத்தில் வெள்ளியிட, ஆக!!!, அற்புத வானம் அவர்கள் மேல் விரிந்தது. அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது. இந்த மலைப்பாதை உருவாக்கும் கால கட்டத்தில் ஏகப்பட்ட உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது என்கிறது வாய்வழி வரலாறுகளும்,
பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக் கொண்ட மக்கள் பழனியிலிருந்து, திருநெல்வேலியிருந்து, கோவையிலிருந்து, ஈரோட்டிலிருந்து, மைசூரிலிருந்து, தர்மபுரியிலிருந்து, இலங்கையிலிருந்து, என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன. அது சிலியின் வீடுகளை ஒத்திருந்தது. சிலியை போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான வால்பாறைஸோ என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ வால்பாறையாக மாறி இருக்கிறது.
விறகு, சுத்தமான மழை நீர் மலை பொதிந்து கொண்டு அவ்வப்போது சொட்டும் சிறு ஓடைகள், கால்வாய்கள், வீடு என்று எல்லாம் இலவசமாக கிடைக்க அவர்கள் வேலை செய்யத் துவங்கினார்கள். காடு தேயிலையாகவும்.. காபியாகவும்… மாறியது. தேயிலை வளர்வதற்கான சரிவான பரப்புகள் அதிகம் உள்ள இடங்கள் வால்பாறை முழுக்க நிறைந்து இருக்கிறது. வருடம் முழுவதும் கொட்டும் மழையால் வால்பாறை சின்ன சிறப்புஞ்சி என்று பெயர் பெற்றது,
வால்பாறை வளமானது. வாழத் தகுதியானது. ஊர் நிறைந்தது. அடுத்தடுத்து ஊர் பிறந்தது. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வசீகரித்தது. எல்லா வீடுகளும் கூட்டு குடும்பம் போலாயின, எவர் வீட்டு கதவும் எப்போதும் திறக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களால் தட்டவும் திறக்கவும் காத்திருந்தன. ஆனால் அங்கே தயாரிக்கப்படும் உயர் தர தேயிலையையும் காபியையும் அந்த மக்கள் இன்று வரை பருகியதே இல்லை,
கவர்க்கல் எப்போதும் பனி படரும் பகுதி., இதோ இந்த பக்கம் ஓர் ஊர் இருக்கிறது” என்று வழி காட்டிய கார்வர் மார்ஷ் அவர்களுக்கு சிலை இன்றும் இருக்கிறது.
அதிக காதல் திருமணங்கள் நடக்கும் ஊர். சாதி மதங்கள் அத்தனை பாடு படுத்துவதில்லை. எவர் வீட்டுக்குள்ளும் அக்கா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான், நண்பா என்று முறை வைத்து கொண்டு நுழையும் அன்பை காண முடிகிறது. “அக்கா கொஞ்சம் கொழம்பு குடேன்” என்றபடியே தட்டில் சோற்றை போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் அழகியல் அங்கே ஏராளம்.
பிடித்துப்போங்கள், யாருக்கு தெரியும்…. வால்பாறை காட்டுக்குள் அதோ பறக்கும் பட்டாம்பூச்சி நீங்களாகவும் இருக்கலாம்.
இன்னும் நிறைய ஆச்சர்யமான தகவல்கள் இந்த வால்பாறை பற்றி உள்ளது, இன்னொரு பதிவில் நிச்சயம் பதிவு செய்கிறேன்...
ஆச்சர்யங்களை நோக்கிய பயணம் தொடரும்...
நன்றி!

Comments
Post a Comment